டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு.

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (25) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி  அதிகரித்துள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 296.58 தொடக்கம் ரூ. 295.85 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 312.53 தொடக்கம் ரூ. 311.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 297.68 தொடக்கம் ரூ. 296.20 ஆகவும், விற்பனை பெறுமதி 310 தொடக்கம் 308.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 298 தொடக்கம் ரூ. 299 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 310 முதல் ரூ. 311 ஆகவும் பதிவாகியுள்ளது.