யாழ்ப்பாணத்தில் வடக்கு ஆளுனருக்கு எதிராக ஊழலுக்கு எதிரான அமைப்பினர் போராட்டம்.
வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எம் சாள்ஸ் வருவாய்க்கு அதிகமான சொத்துக்களை சேர்த்தவரும் பல ஊழல் முறைகேடுகளுடன் தொடர்புடையவர் ஆக இருப்பதால் அவரை வடக்குக்கு அனுப்பக்கூடாது என ஊழலுக்கு எதிரான அமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை யாழில் உள்ள வட மாகாண ஆளுநர் செயலகம் முன் அடையாளம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சார்ஸ் தொடர்பில் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கொழும்பில் பல கோடி பெறுமதியான ஆறு வீடுகளை கொள்வனவு, வவுனியா ஓமந்தை பகுதியில் எரிபொருள் நிலையத்தை கொண்டு வரவு செய்வதற்கு எவ்வாறு பணம் வந்தது? அதனை அண்டியுள்ள 30 ஏக்கர் காணியை அடாவடித்தனமாக அபகரித்தது ஏன்? ஆசிரியர் இட மாற்றத்தின் போது ஒரு இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன் 2021ல் 25 பேருக்கு ஆசிரியர் நியமனத்தின் போது இலஞ்சம் வாங்கிய பணம் எங்கே.
முல்லைத்தீவில் மணல் கொள்ளையின் போது கோடிக்கணக்கில் உழைத்த பணம் எங்கே, மன்னாரில் 12 ஏக்கர் காணியை பிஷப் ஹவுஸ்சுக்கு கொடுத்து மிகுதிக் காணியை அபகரித்தது ஏன்? இவ்வாறு பல மோசடிகளுடன் தொடர்புடையவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வட மாகாண ஆளுநராக நியமித்தமையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஆகவே எமது கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் தொடர்ந்தும் ஆளுநர் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.