தமிழர்களை வீழத்தியதை வெற்றியாக கொண்டாடிய இலங்கை அரசு

பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளை பலிகொடுத்த தமிழினப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகளை தமிழ்மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்தனர். இதேவேளை, இன்றைய தினம் தமிழர்க்கு எதிரான யுத்தத்தை சர்வதேசத்தின் துணையுடன் வெற்றி பெற்ற சிறீலங்கா அரசு போர் வீரர்களுக்கான தேசிய போர் வீரர் தினத்தை தமிழரை வீழ்த்திய போர் வெற்றிவாதமாக கொண்டாடி வருகிறது.

அந்தக் கொண்டாட்டத்திலே 5,400 க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வுகள் இன்றைய தினம் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்படுகின்றது.