போப் பிரான்சிஸ்யை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி.

மே 13, சனிக்கிழமையன்று மாலை 4 மணியளவில், உக்ரேனிய அரசுத்தலைவர் Volodymir Zelensky-ஐ திருப்பீடத்தில் சந்தித்தபோது, இது எனக்கும் மிகப்பெரும் கவுரவம் என்று கூறியதுடன், அவரது வருகைக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச் செயலகத்தில் பணிபுரியும் போலந்து அருள்பணியாளர் Marko Gongalo என்ற மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இரு தலைவர்களும் உரையாடலில் நேரத்தை செலவிட்டனர்.

மேலும் ஏறக்குறைய 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், உக்ரைனில் நடைபெற்று வரும் போரைத் தொடர்ந்து மனிதாபிமானம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, பல்வேறு பொது நிகழ்வுகளில் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக வேண்டும்படியும் ஒத்துழைப்பு நல்கும்படியும் வேண்டுகோள் விடுத்ததாகவும், அந்நாட்டின் அமைதிக்காகத் தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் அவரிடம் உறுதியளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் இந்தச் சந்திப்பின் முடிவில் இருவரும் பரிசுப்பொருளைகள் பரிமாறிக்கொண்டனர். உக்ரேனிய அரசுத் தலைவர் Volodymir Zelensky, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி இருவருக்கும் இடையே முதல் சந்திப்பு நிகழ்ந்தது.