சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர ஜனாதிபதி உத்தரவு.
16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களை அடுத்து, ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் இழைக்கப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கான அவசரத்தை வலியுறுத்தி சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு கடுமையான சட்டம் இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கல்வி ஆசிரியர் ஒருவரால் 16 பிள்ளைகள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தனியான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதிஇ இந்த சட்ட அமைப்பை தயாரிக்கும் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் தெரிவித்துள்ளார். அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்டவுடன் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.