யாழ்ப்பாண தொகுதிக்கிளை கூட்டத்தில் எந்தக் கைகலப்பும் இடம்பெறவில்லை : சுமந்திரன் தெரிவிப்பு

தேர்தல் முறையில் சீர்சிருத்தம் செய்வது நல்ல விடயம். ஆனால் சீர்சிருத்தம் இன்னும் செய்யவில்லை என்ற காரணத்திற்காக தேர்தலை நடத்தாமல் இருப்பது தவறான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் யாப்பில்  புதிய திருத்தங்களை சேர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விடயங்கள் இன்று சபையிலே சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.ஜனாதிபதியுடனான சந்திப்பில்  சந்திப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களே பேசப்படும் என சொல்லப்பட்டிருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். வெறுமனே சட்டங்களை திருத்தி விட்டு மாகாண சபைகள் இயங்காமல் விட்டால் அதில் அர்த்தமில்லை.

ஒரு அரசாங்கம் செய்யவேண்டியவிடயத்தை ஒரு கட்சி செய்துள்ளது. தனிநபர் சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். அதனை சிங்களத் தரப்பைச் சேர்ந்த இருவர் சவாலுக்குட்படுத்தியதுடன் உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பில் ஒரு விவாதம் இடம்பெற்றது எனவும் தெரிவத்தார்.அதனடிப்படையில் உச்சநீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பினை நாடாளுமன்றுக்கும் அதிபருக்கும் அறிவிக்கும்.

இந்தச் சட்டமூலத்தை நடமுறைப்படுத்தினால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தமுடியும். அப்படி நடாத்தும்போது பழைய தேர்தல் முறையிலேயே நடத்தலாம்.தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை அரசாங்கம் மறுதலிக்கக் கூடாது.

இதேவேளை மகிந்தவை பிரதமராக நியமிக்கப் போவதாக ஒரு வதந்தி ஒன்று பரவியது. அப்படி நடந்தால் கடந்த வருடம் போராட்டமநடத்தியவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் எனும் பயத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவே நாம் அறிகின்றோம்.தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக்கிளை கூட்டத்தில் எந்தக் கைகலப்பும் இடம்பெறவில்லை. கூட்டம் முடிந்த பின்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக எம்மிடம் கேட்கமுடியாது என அவர் தெரிவித்தார்.