100 கோடி வசூலை நெருங்கும் ‘தி கேரளா ஸ்டோரி ‘.!!

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி ‘திரைப்படம் வசூல் ரீதியாக பல கோடிகளை அள்ளி வருகிறது. கடந்த 5-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 7 நாட்களில் 94 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இன்று 8-வது நாளாக படம் 100 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 நாளுடன் ஒப்பிடுகையில் 8-வது நாளில் அதன் வசூல் அதிகரிக்கும் என்றே கூறலாம். ஏனென்றால், படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு கூட்டமாக பலரும் சென்று வருகிறார்கள்.  எனவே, இப்படம்  ரூ.100 கோடி வசூலை இன்று கடந்துவிடும் என தெரிகிறது. முதல் நாளில் ரூ 8.03 கோடியுடன் திரையரங்குகளில் ஓடத் தொடங்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ முதல் வார இறுதியில் நல்ல வசூலை ஈட்டியது. அதனை தொடர்ந்து, சனிக்கிழமை ரூ 11.22 கோடியும்,  ஞாயிற்றுக்கிழமை ரூ 16.40 கோடியும் வசூல் செய்தது.

அதனை தொடர்ந்து , திங்கட்கிழமை ரூ.10.07 கோடியும், செவ்வாய்கிழமை ரூ.11.14 கோடியும், புதன்கிழமை ரூ.12 கோடியும், வியாழன் அன்று ரூ.12.50 கோடியும் வசூல் செய்துள்ளது. நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வருவதால் வசூலில் படம் சில சாதனைகளையும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை இயக்குனர் லதா சீனிவாசன் எழுத,  இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கியுள்ளார். படத்தில் ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி, சோனியா பாலா, தேவதர்ஷி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.