மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்-ஆளுநர்
சென்னை, ஆளுநர் மாளிகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினர். அப்போது பேசிய ஆளுநர், மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதுபோன்று சட்டம் படிக்க விரும்புபவர்கள் சிறப்பான சட்ட பள்ளியை தேர்வு செய்ய வேண்டும்.
தொலைபேசியை மாணவர்கள் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் என்றும் நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் திறமையோடு விளங்க வேண்டும் அறிவுரை வழங்கினார்.ஆளுநருடனான கலந்துரையாடலில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினி மற்றும் நாமக்கல் மாணவியான திருநங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு விருது வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.