600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினி முதல்வரைச் சந்தித்தார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாணவி ச.நந்தினி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று  வெளியிடப்பட்டன.

இத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களிலும் முழு  மதிப்பெண்கள் வீதம் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சதானை படைத்தார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.