சீன ராஜதந்திரிளை நாடு கடத்த கனடா முடிவு: சீனா கண்டனம்.

கனடாவிற்கான சீனத் தூதரகத்தில் பணியாற்றி வரும் ஸாவொ வெய் என்ற சீன ராஜதந்திரியே நாடு கடத்தப்பட உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் சொங் மற்றும் அவரது குடும்பம் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் மீது சீனா அரசியல் தலையீடுகளை செய்யும் முனைப்புக்களில் இந்த ராஜதந்திரி செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நாட்டின் சட்டங்களுக்கு ஸாவோ வெய், பொருத்தமற்றவர் என வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோன் தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களின் பாதுகாப்பும் மக்களின் சுபீட்சமும் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கனடாவின் உள்விவகாரங்களில் சீனா தலையீடு செய்ய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியே இவ்வாறு ராஜதந்திரி ஸாவோ நாடு கடத்தப்பட உள்ளார். இதேவேளை, தமது நாட்டு ராஜதந்திரியை நாடு கடத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் இதனை கடுமையாக எதிர்ப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.