இன்று முதல் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படாது.!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை எழுந்ததை அடுத்து, இந்த திரைப்படம் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டுவந்தது, இந்த திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அறிவித்ததை அடுத்து படம் 5ம் தேதி வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளனர்.

கேரள பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் முஸ்லிம் பெண்கள் மீதான வன்மத்தை உமிழ்வதாக விமர்சிக்கப்படுகிறது. படம் திரையிட எழும் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை & பெரிய வசூல் இல்லாததால் திரையிட வேண்டாம் என உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.