மின்சாரம் தாக்கி யாழ் மத்திய கல்லூரி உயர்தர மாணவன் உயிரிழப்பு.

யாழ். வண்ணார்பண்ணை பகுதியில் க.பொ.த. உயர்தர மாணவர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை 1.15 மணியளவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் கண்ணதாசன் இராகுலன் (வயது 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேவொரு இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார்.

அப்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மழை பெய்துகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்சார தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.