மூன்றாம் சார்லஸ் மன்னரின் ஆடம்பரமான முடிசூட்டு விழா பற்றி  பிரஜைகள் விமர்சனம்.

வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் ஊதியம் தொடர்பான பரவலான வேலைநிறுத்தங்களுடன் சிக்கியுள்ள நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் ஆடம்பரமான முடிசூட்டு விழாவிற்கு வரி செலுத்துவோர் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில பிரித்தானிய பிரஜைகள் கேள்வி எழுப்புள்ளனர்.

முடிசூட்டுக்கான செலவு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றுமு; மொத்த தொகை சனிக்கிழமை நிகழ்வுக்கு பிறகு வெளியிடப்பட வாய்ப்பில்லை 50 வயதுடைய கட்டடிடத் தொழிலாளி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார். சில மதிப்பீடுகளின்படி, பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கையின் விலைக்கு மேல் 50 மில்லியன் பவுண்டுகள் மற்றும் 100 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

மற்றொரு லண்டன்வாசியான, ஈடன் ஈவிட், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சமைப்பதன் மூலமும், மீதமுள்ள நேரத்தில் சாண்ட்விச் சாப்பிடுவதன் மூலமும் செலவைக் குறைப்பதாகக் கூறுகிறார். நாங்கள் ஒரே வாழ்க்கையை வாழவில்லை… மக்கள் போராடுகிறார்கள்,’ என்று 38 வயதானவர் கூறுகிறார். ‘சிலர் சாப்பிடவே இல்லை.

மிகவும் கடினமாக இருக்கிறது.’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சிரமத்தில் உள்ள மக்களுக்கு கிட்டத்தட்ட மூன்று மில்லியன் அவசர உணவுப் பொட்டலங்களை வழங்கியதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியது.இது முந்தைய ஆண்டை விட இது 37 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.