திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.

திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் என ஆளுநர் கூறியது சரிதான் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அயோத்திதாசரின் 109-வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலுள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த பெருமையும் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் வரலாற்று போராளிகளின் பெயர்களை மறைத்து இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து தமிழர்களின் பெருமையும் தனிச் சிறப்பும் திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகிறது. சமாதி கட்டுவது, பேனா வைப்பது, பள்ளிக்கூடங்களை  சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல்.

 திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் தான். கவர்னர் சொல்வதை  ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தில் வெளியாகி உள்ள கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

எதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிராக வெளியான படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். திரையரங்கில் முன்னால் போராடினால் தமிழக அரசால் என்ன செய்ய முடியும் என்றுமு; அவர் கேள்வி எழுப்பினார்.