கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தையிட்டி விகாரையை திறந்து வைக்க முடிவு.

யாழ்., வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை பொசனன்று திறந்து வைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டது.இதையடுத்து விகாரையை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் விகாரையை அடுத்த மாதம் 3ஆம் திகதி பொசனன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.