முறையற்ற வகையில் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சட்ட ஏற்பாடு.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி தொடர்பான பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அழைத்திருந்தது.இதன்போது கோப் குழுவினால் கவனம் செலுத்தப்பட்ட பிரதான 10 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை பின்பற்றுவது தொடர்பான சிக்கல்கள் சற் புள்ளி முறைமைக்கு மேலதிகமாக ஒரு சில பாடங்களுக்கு நடைமுறைப் பரீட்சை நடத்துவதால் உயர்ந்த சற் புள்ளிகளைக் கொண்ட ஒரு சில மாணவர்களுக்கு இடம்பெறும் அநீதி பல்கலைக்கழ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வருகையை உறுதிப்படுத்தும் சரியான முறைமையொன்று இல்லாமை முறையான ஒழுங்குபடுத்தல் இல்லாமை காரணமாக சட்டவிரோதமாக கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களைப் பயன்படுத்தல் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பான ஒழுங்குவிதி தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துதல் மற்றும் தொழிற் சந்தைக்குப் பொருத்தமான வகையில் பாடநெறிகளை தயாரிப்பதன் அவசியம் பல்கலைக்கழ சேமலாப நிதியம் தவறாகப் பயன்படுத்துவதால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் அவசியம் பல்கலைக்கழக கட்டமைப்பின் மனிதவளத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் புரிந்துணர்வுடன் செயற்படுதல் அதிகமான வெளிநாட்டு மாணவர்களை கவரும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவதன் அவசியம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உயர்தர விடைப்பத்திர மதிப்பீட்டிலிருந்து விலகியுள்ள நிலையில் அந்தப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமான தலையீடு செய்தல் இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவது மற்றும் தொழிற் சந்தைக்கு ஏற்ற பட்டதாரிகளை உருவாக்குதல் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.