பாராளுமன்ற உறுப்பினொருவரால் வழங்கப்படும் கடிதம் புகலிடம் (Asylum) விசா விண்ணப்பத்தின் முடிவை தீர்மானிப்பதில்லை .

இனமொன்றின் குரல்

பாராளுமன்ற உறுப்பினொருவரால் வழங்கப்படும் கடிதம் புகலிடம் (Asylum) விசா விண்ணப்பத்தின் முடிவை தீர்மானிப்பதில்லை ஒவ்வொரு புகலிட விசா விண்ணப்பமும் அதன் தனிப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது, குறிப்பாக விண்ணப்பதாரரின் தனிப்பட்ட சான்றுகள் (Individual merits), சான்றுகளின்நம்பக தன்மை (Credibility of their evidence), சட்ட மற்றும் உண்மை தன்மை (Legal and factual basis for their claim), சட்டத் தேவைகள்(Legal requirements) போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது.
பாராளமன்ற உறுப்பினரால் வழங்கப்படும் கடிதம் குறித்த விசா விண்ணப்பதாரியினை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக மட்டுமாகவே மதிப்பீடு செய்யப்படும் உலகில் உள்ள சகல நாடுகளிலும் தாங்கள் பிரதிநித்துவம் செய்யும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்கள் கடிதம் கொடுக்கின்றார்கள் இது ஒன்றும் குற்றச்செயல் கிடையாது . இது மிக சாதாரண நடைமுறையாகவே இருக்கிறது . தற்காலிகமாக தங்கி இருக்கும் நாட்டில் இருக்கும் பாராளமன்ற உறுப்பினர்களிடம் கூட கடிதங்களை பெற்று கொள்ள முடியும்.
இது பற்றியெல்லாம் தெளிவில்லாத இராணுவ புலனாய்வு அமைப்புகள் காணாமலாக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கின்றார்கள் என்றும் அதற்கு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் உதவுகின்றார்கள் என்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்காக அருண் சித்தார்த்  ஊடக திரு சிவாஜிலிங்கம் அவர்களை string operations செய்து இருக்கின்றார்கள் இதில் எந்த பெறுமதியும் கிடையாது.