IMF தீர்மானம் நிறைவேற்றம்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட அரச பங்காளிக்கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும், அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பௌசி ஆதரவாக வாக்களித்தார்.

இந்தநிலையில், பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது.