பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்வு.
பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2இ500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ள நிலையில் மற்ற நகரங்களில் வசிப்பவர்களோ வரலாறு காணாத வகையில், மாதம் ஒன்றிற்கு 1,900 பவுண்டுகள் வாடகை செலுத்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வாடகைக்கு விடப்படும் நிலையில் இருக்கும் வீடுகளைவிட, வாடகைக்கு வீடு தேடும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.