கனடாவில் தனது மனைவியை அடியாளை வாடகைக்கு அமர்த்தி சுட்டுக் கொன்ற தமிழ் வர்த்தகர்:
கனடா ரொரோன்ரோ பகுதியில் பிரபலமான தமிழ் வர்த்தகர் ஒருவர் தனது தனது 38 வயது தீபா சீவரத்தினத் அடியாட்களை வைத்து சுட்டக் கொலை செய்திருக்கிறதிற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்துள்ளதாக நீதிபதி ஆண்ட்ராஸ் ஷ்ரெக் தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் தீபா சீவரத்தினம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பிரதிவாதிகள் மீதான விசாரணையில் அவரது கணவர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக ஆதாரங்கள் வெளிப்பட்டள்ளன. மார்ச் 13, 2020 அன்று காலை 9:40 மணியளவில் அஜின்கோர்ட்டில் உள்ள 36 முர்ரே அவேயில் தீபாவின் வீட்டிற்கு வந்த டிலிவரி ஆளாக வந்த கொலையாளி தீபாவினை சுட்டுவிட்டு அவரது தயாhihயும் சுட்டுள்ளார். தயாரான லீலாவதி காயங்களுக்கு உள்ளான வேளை தீபா மரணமானார்.
ரியல் எஸ்டேட்டுகளுக்கு சொந்தக்காரரான விஜேந்திரன் பாலசுப்ரமணியம் காதல் திருமணமானபோதிலும் தீபாவின் உறவுக்காரப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பை பேணி வந்திருக்கின்றார். கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனைகளோடு இருந்த நிலையில் பிள்ளைகளுக்காக வாழ்ந்த தீhவினை சதி செய்து கொலை செய்தள்ளார்.
விஜேந்திரனின் தொலைபேசி பதிவுகள், மற்றும் அவருக்கு சொந்தமான பொன்சினியன் கடைக்கருhமையில் கொலையாளியின் வாகனம் இருந்தமை, வீட்டு சிசிரிவி கமரா செயலிழக்கச் செய்யப்பட்டமைகளோடு பல ஆதாரங்கள் கணவன் விஜேந்திரனே கொலைச் சதியை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விசாரணைகள் இன்னும் பல வாரங்கள் நீடிக்கும் என நீதிபதி ஆண்ட்ராஸ் ஷ்ரெக் தெரிவித்துள்ளார்.