இளம் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் தொல்லை: போராட்டத்திற்கு பிரபலங்கள் ஆதரவு
மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக கட்சியின் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய டெல்லி காவல்துறை மற்றும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், வீராங்கனைகளின் போராட்டம் குறித்து பல பிரபலங்கள் ஆதரவையும், கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.