மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார்.! பாஜக எம்.பி மீது போலீசார் வழக்குப்பதிவு.!
டெல்லியில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாகபாலியல் புகாருக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மலியுத்த வீராங்கணை சம்மேள தலைவராக பொறுப்பில் இருக்கும் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங், வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார் எனவும் அவர் மீது பாலியல் குற்றம் ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வீராங்கனைகள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
அவர் நடப்பு எம்பி என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் தாமதிப்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து வீராங்கனைகள், எம்பி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங் மீது வழக்கு பதிவு செய்வதாக டெல்லி காவல்துறையினர் உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து , 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பெயரில் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங் மீது டெல்லி காவல் துறையானது போக்ஸோ சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.