பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் கணிக்கும் ஆடு ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது.
ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் ஜெட்பேக் என்ற இடத்தில் வாழ்கிற சூ ச்கரியா என்ற நபரிடம் பில்லி என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது. அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது.
பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு இல்லை என பதிலளித்தது பில்லி.ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா, இணைந்து வாழ்வார்களா என்ற கேள்விக்கு, இணைந்து வாழ்வார்கள் என பதிலளித்தது பில்லி.மேலும், அடுத்து பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினர் என பதிலளித்துள்ளது பில்லி