யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருள் விற்பனை .

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து தலா 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.ஊரெழு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனையே கைது செய்துள்ளதாகவும், குறித்த நபர் யாழில் மாணவர்களை இலக்கு வைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.