முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைக்க வேண்டும்:சரத் பொன்சேக்கா சீற்றம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், இழப்பீடு செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போதாது என்றும் அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 21 ஆம் திகதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேலியகொடையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலவீனமான ஆட்சியாளர்களும்,  பாதுகாப்பு படை பிரதானிகளும் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இனங்காண முடியாது. எவ்வாறிருப்பினும் இதனை வருடக்கணக்கில் காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.