வளிமண்டலவியல் திணைக்களகத்தின் விசேட அறிவித்தல்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகலை மாவட்ட மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில், வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், அதிக அளவில் இருப்பதைக் காட்டுகிறது.

இந்த நிலையில், பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது.வீடுகளில் இருக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளவும் திணைக்களம் கூறுகிறது.சிறிய குழந்தைகளை தனியாக வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் பெரியவர்களை கேட்டுக் கொள்கிறது.