மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்.


மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.பெரம்பூர் அரபிக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்று திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபினாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, உள்நோக்கத்துடன் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தமிழக அரசின் வாதத்தை ஏற்றுது சென்னை உயர்நீதிமன்றம்.இதன்பின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும்,  மசூதியை இடிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் கோபினாத் இந்து முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார் என கூறப்படுகிறது.