குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்: சுற்றாடல் துறை நிபுணர் நயனக ரன்வெல்ல  சீற்றம்.

குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை விஞ்ஞான ஆய்வுகளுக்காக ஏற்றுமதி செய்ய வேண்டும் என சுற்றாடல் துறை நிபுணர் நயனக ரன்வெல்ல அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஒரு இலட்சம் குரங்குகள் சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு தான் உண்மையில் வழங்கப்படுகிறதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. சீனாவில் குரங்கு மூளையை கொண்டு சமைக்கும் உணவு பிரபல்யமானது. உணவு உற்பத்திகளுக்காக குரங்குகள் கோரப்படலாம்.

விஞ்ஞான ஆய்வு நடவடிக்கைகளின் இறுதி பரிசோதனைகள் குரங்குகளை கொண்டு முன்னெடுக்கப்படும். மூன்றாம் தலைமுறை ஆய்வுகளுக்கு குரங்குகள் பயன்படுத்தப்படும்.குரங்குகளுக்கு பதிலாக நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும்.மூளை உணவுகளுக்காக அரசியல்வாதிகளை பயன்படுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.