முல்லைத்தீவு-நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேத்தில் வசித்துவரும் நான்கு வயதுடைய சிறுவன் நிமோனியா காச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) இரவு சிறுவன் சளிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இதில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் பிரோத பரிசோதனைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிறுவன் நிமோனியா காச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.