கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் : மாநில மகளிர் ஆணைய விசாரணை நிறைவு.


கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் தொடர்பாக மாணவிகளிடம், இன்று மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.சென்னையில் இயங்கிவரும் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

மாநில மகளிர் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி.மகேஸ்வரன் தலைமையில் மாணவிகளிடம் இன்று விசாரணை நடைபெற்றது. நேற்று கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் தொடங்கிய விசாரணை இன்று இரண்டாவது நாளாக மாணவிகளிடம் நடத்தப்பட்டது.

30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுமார் 20 நிமிடங்கள் இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும், விசாரணையில் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு இடையூறு ஏதும் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக இந்த விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.