புத்த மதத் தலைவர் தலாய் லாமா  சிறுவனுக்கு  நாக்கால் கொடுத்த முத்தம்: பெரும் சர்ச்சை.

புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவனுக்கு வாயில் முத்தம் கொடுத்ததுடன், சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி கூறியதாக, ‘வீடியோ’ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் தஞ்சமடைந்துள்ளார். சமூக வலைதளத்தில் இவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவர் ஒரு சிறுவனுக்கு முத்தம் தருவதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

அந்த சிறுவன் தலாய் லாமாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறான். அப்போது அந்த சிறுவனின் வாயில் தலாய் லாமா முத்தம் கொடுக்கிறார். தன்னுடைய நாக்கை நீட்டி, சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி தலாய் லாமா சொல்கிறார். இந்த காட்சி அப்படியே அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில், தன் காலில் விழுந்த ஒரு சிறுவனின் வாயில் அவர் முத்தம் கொடுக்கிறார்.

மேலும், தன் நாக்கை நீட்டி சிறுவனின் நாக்கால் தன் நாக்கைத் தொடும்படி அவர் கூறுவது, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அதாவது, ‘என் நாக்கை நீ முத்தமிட முடியுமா’ என்று அந்த சிறுவனிடம் தலாய் லாமா கேட்கிறார். இதை பார்த்த பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இதெல்லாம் அருவருப்பானது, கேவலமானது, கண்டனத்திற்குரியது, ஒரு ஆன்மீதக தலைவர் செய்யக்கூடிய வேலையா? இதெல்லாம் என்றெல்லாம் கண்டனங்கள் உலகம் முழுவதிலும் இருந்து குவிந்து கொண்டிருக்கிறது.