பாலியல் புகார் தொடர்பாக கலாசேத்ரா கல்லூரியில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.


பாலியல் புகார் தொடர்பாக கலாசேத்ரா கல்லூரியில், நாளை மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில்  ஈடுபட்டதாக  புகார்கள் எழுந்தது.இதனை அடுத்து தனிப்படை அமைத்து ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்த பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு முன்னாள் தமிழக டிஜிபி லத்திகா சரண் தலைமையில் கலாஷேத்ரா அறக்கட்டளை விசாரணை குழுவை அமைத்துள்ளது.இதனை தொடர்ந்து, பாலியல் புகார் தொடர்பாக கலாசேத்ரா கல்லூரியில், நாளை மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.