திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலா முறையாக அழைக்கப்படுவார்: ஓ. பன்னீ்ர்செல்வம் தெரிவிப்பு

திருச்சி மாநாட்டில் பங்கேற்க சசிகலாவை முறையாக அழைப்பது பற்றி பிறகு அறிவிப்பு வரும் என, மதுரையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீ்ர்செல்வம் தெரிவித்தார்.தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு செல்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, கட்சி தோன்றி 50 ஆண்டு பரிபூரண வெற்றியைக் கண்டது, 51 ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழா என, முப்பெரும் விழா திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் குழுமி கட்சியின் வலிமையை அங்கே நிரூபிப்பார்கள்.கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி போன்றோர்களுக்கு உறுதியாக அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் தொடர்ந்து கட்சியில் தான் இருக்கின்றனர்.

கட்சியின் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் நிச்சயம் பங்கேற்பர்.திருச்சி மாநாட்டில் எவ்வளவு பேர் பங்கேற்பர் எனநேரடியாக பார்க்கத்தான் போகிறீர்கள். சசிகலா போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த, ஓபிஎஸ். முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். அனைவரும் கலந்து கொள்வார்கள்’ என்று கூறினார்.