சீனாவுக்கு பயணமாகவுள்ள இலங்கைக் குரங்குகள்.

இலங்கையின் டோக் குரங்குகளை சீனாவிலுள்ள விலங்கியல் பூங்காக்களுக்கு வழங்குமாறு சீனப் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

1 இலட்சம் டோக் குரங்குகளை முதற்கட்டமாக வழங்கும் மானியக் கோரிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இலங்கை டோக் குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த குழுவில் அமைச்சு, விலங்கியல் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இந்தக் குழுவை உடனடியாக நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட உள்ளது.