ஈஸ்டர் வழிபாட்டில் பங்குபற்றிய பிரதமர் நரேந்திர மோடி.

ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த ஆயர்கள்களுக்கும், அருட்தந்தையர்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார். பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சிறுபான்மையினர் மத்தியில் உள்ள பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என கூறப்படும் நிலையில், ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்திற்குச் சென்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின், ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்னும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதாவது எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் மேம்பாடு என்ற பொன்மொழிகளுக்கு தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். நேற்று காலை, “ஈஸ்டர் திருநாளை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு வாய்ந்த இந்த தினம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுவாக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நினைவுகூர்வோம்” என்று வாழ்த்தியிருந்தார்.