அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டு விடுவிப்பு.!
ஆபாச பட நடிகையுடன் ரகசிய தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டு விடுவிப்பு.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கும் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் ரகசிய உறவு இருந்ததாக தகவல் வெளியாகி பெரிய சர்ச்சையானது.
இந்த ரகசிய தொடர்பை மறைப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்ட்ராமி டேனியல்ஸுக்கு கட்சியின் நிதியில் இருந்து ($130,000) இந்தியா மதிப்பின் படி ரூ.1,06,84,375 கோடி பணம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், அமெரிக்கா சட்டப்படி இவ்வாறு பொய்யாக வணிக பரிமாற்றங்கள் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். எனவே, இதன் காரணமாக டிரம்பிற்கு எதிராக தேர்தல் பிரசார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இதனையடுத்து, நேற்று டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நியூயார்க் நீதிமன்றத்தில் சட்டமுறைப்படி போலீசார் அதிரடியாக கைதும் செய்தனர். இந்நிலையில்,ஆபாச பட நடிகையுடன் தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.