மனோ கணேசனின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்க யோசனைக்கு தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆதரவு.

உங்களுடைய தமிழ் நாடாளுமன்ற அரங்க முயற்சிக்கு எமது பங்களிப்பு என்றும் உள்ளது. இந்த முயற்சியை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் ‘ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை மனோ கணேசன் முன்னிறுத்தியுள்ளார்.அத்துடன் இந்த யோசனையைக் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.இதற்குப் பதிலளிக்கும் போதே புளொட் தலைவர் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.