நுவரெலியாவில் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கான வாகன ஊர்வல பேரணி.

செ.திவாகரன்

நுவரெலியாவில் பிரபல்யமான இரு பாடசாலைகளான நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மற்றும் காமினி தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக இரு பிரசித்திப்பெற்ற பாடசாலையின் நிர்வாகத்தினரும் , பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான நகரில் வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா – உடபுசல்லா பிரதான வீதியில் அமைந்துள்ள நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்து நுவரெலியா பிரதான நகர வீதி வழியாக குயின் எலிசபெத் , கண்டி பிரதான வீதி , பழையக்கடை வீதி போன்ற வீதிகளினுடாக சென்று மீண்டும் பிரதான வீதியூடாக நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியை சென்றடைந்து வாகன பேரணி நிறைவு பெற்றது.

இவ்வாகன பேரணியில் இரு கல்லூரிகளின் பழைய மாணவர்கள் , இரு கல்லூரிகளின் கிரிகெட் அணிகளின் தலைவர்கள் , வீரர்கள் , அதிபர்கள் , ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

“Battle of Little England” கிரிக்கெட் போட்டித்தொடர் நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் (சினிசிட்டா மைதானம்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .