பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா நடன பேராசிரியர் கைது.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா நடன பேராசிரியர் ஹரி பத்மன் ஹைதிராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார் என அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது.

பல்வேறு மாணவிகள் கொடுத்த புகாரின் பெயரில் அவரை கைது செய்ய வேண்டும் என மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாகிவிட்டார். இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதன் முதலாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் தான் பேராசிரியர் ஹரி பத்மன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹரி பத்மனை கைது செய்த பின்னர். கலாஷேத்ரா கல்லூரி முதல்வருக்கு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  ஹரி பத்மன் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.