அமெரிக்காவில் சக்திவாய்ந்த புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக 60 புயல்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய, மேற்கு அமெரிக்காவில் உள்ள 8 மாகாணங்களை தாக்கிய இந்த புயலால் பல வீடுகள் மற்றும் மால்கள் சிக்கி சேதமடைந்தது.

முதற்கட்ட தகவலின் படி, இந்த புயலால் குறைந்தது 21- பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இல்லினாய்ஸ், ஆர்கன்சாஸ் உள்ளிட்ட மாகாணங்களில் மேலும் பல உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டதை தொடர்ந்து, தற்போது பலி எண்ணிக்கை 32 – ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த புயலில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற புயல்கள் வரும் 10-ஆம் தேதி வரை தாக்கலாம் எனவும்,  இதன் காரணமாக  மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும், அமெரிக்க வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை கொடுத்துள்ளது.