யாழ்ப்பாணத்தில் இன்று தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு.


தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்தினார்.இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நினைவு தூபிக்கு மலர் துவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்த் தாய்த்தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் பெருந்தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்  அவர்களைத் தமிழ் மக்கள் அன்போடு ‘தந்தை செல்லவா’ என்று அழைத்தனர். 1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சியாக மலர்ந்தது. தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனத்தை தமிழர்கள் தற்போதைய தமிழ் அரசியல்  இழுபறி நிலைகளிலும் நினைவுகூhவது இங்கு குறிப்பிடத்தக்கது.