புலம்பெயர்வோரை வரவேற்க ஜேர்மனி புதிய திட்டம்.

ஜேர்மன் அரசு, புலம்பெயர்தல் சீரமைப்பு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு தடையாக உள்ள விடயங்களை அகற்றவும், ஜேர்மனிக்கு வந்த புலம்பெயர்ந்தோர் எளிதாக ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்து, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவும் அத்திட்டம் வழிவகை செய்யவுள்ளது.

ஜேர்மனியின் புதிய புலம்பெயர்தல் திட்டம், ஐரோப்பிய ஒன்றியமல்லாத வெளிநாடுகளிலிருந்தும் பணியாளர்களை வரவேற்க உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாகும்.திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் ஜேர்மனியில் தொடர்ந்து வாழவும் அத்திட்டம் வழிவகை செய்யவுள்ளது.இது தொடர்பான சட்ட வரைவு ஒன்றை ஜேர்மன் உள்துறை அமைச்சகமும், தொழிலாளர் துறை அமைச்சகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

ஆண்டொன்றிற்கு 125,000 பணியாளர்களை, ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து ஜேர்மனி வரவேற்க உள்ளதாக நம்பப்படுகிறது.ஜேர்மனியில் பல்வேறு துறைகளில் திறன்மிகுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிவருகிறது.கடந்த ஆண்டில்இ சுமார் இரண்டு மில்லியன் பணியிடங்கள் காலியாக இருந்ததாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான யேnஉல குயநளநச தெரிவிக்கிறார். ஆகவேதான் புலம்பெயர்வோரை வரவேற்க ஜேர்மனி முயற்சிகள் எடுத்துவருகிறது.

இந்த புலம்பெயர்தல் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், நமக்கு தொடர்ச்சியாக புலம்பெயர்வோர் தேவைப்படுகிறார்கள். திறன்மிகு புலம்பெயர்வோரை வரவேற்கும் அதே நேரத்தில் சட்டவிரோத புலம்பெயர்தலையும் நாம் கட்டுப்படுத்தவேண்டியுள்ளது.ஆகவே, இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் நாம் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.