சைவ மதத்தை அழிப்பதற்கு முயற்சி.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிகப்பட்டமை தொடர்பில் மிகுந்த வேதனை அடைவதாக அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆறுதிருமுருகன், சைவ மக்களுக்கு அண்மைக்காலமாக தொடர்ச்சியாக அதிர்ச்சியான செய்திகள் வந்துகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கமைய, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மட்டுமன்றி, கீரிமலையில் இருந்த ஆதிச் சிவன் கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சைவ ஆலயங்களை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாக பெளத்த அடையாளங்களாக மாற்றி வருவதாகவும் ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
முழு சைவ மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டுமெனவும் அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.