வவுனியா வெடுக்குநாறிமலை விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சரவணபவன் மற்றும் தமிழ் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.