இலங்கையில் நிலநடுக்கம்!
இலங்கையில் பேருவளை கரையோர பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 3.7 மெக்னிடியூட் அளவில் சிறிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருவளையில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்கல் ஒரு மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனினும் இதனால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.