காணி உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை.
வடக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாந்து தலைமையில், அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக, காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.