அமெரிக்கா உட்பட எந்த எதிரியையும் அழிக்கும் ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக எச்சரிக்கை.
தனது சொந்த இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா உட்பட எந்த எதிரியையும் அழிக்கும் ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலின் செல்வாக்கு மிக்க செலாளர் நிகோலாய் பட்ருஷேவ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ரஷ்யாவுடன் நேரடி மோதல் ஏற்பட்டால் அமெரிக்கா ஒரு தடுப்பு ஏவுகணைத் தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது. அதன் பிறகு ரஷ்யாவால் பதில் சொல்ல முடியாது என அமெரிக்கா தனது சொந்த பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இது முட்டாள்தனம் மற்றும் மிகவும் ஆபத்தானது.
ரஷ்யா பொறுமையாக உள்ளது மற்றும் அதன் இராணுவ நன்மையைக் கொண்டு யாரையும் மிரட்டுவதில்லை.ஆனால்இ அதன் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா உட்பட எந்தவொரு எதிரியையும் அழிக்கும் திறன் கொண்ட நவீன தனித்துவமான ஆயுதங்களைக் ரஷ்யா கொண்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.