வவுனியாவில் நாளைய தினம் இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு மாவை சேனாதிராஜா அழைப்பு.

வவுனியாவில் நாளைய தினம் இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இதற்கு அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஆதிலிங்கேஸ்வரர் உட்பட விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடியியதாகவும் கூறினார்.குறிப்பாக வெடுக்குநாறி மலை விடயம் மாத்திரமல்லாது வடபகுதியில் உள்ள ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் எமது குரல்களை எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.