இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு: தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு அதிருப்தி.
போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிகாரிகளுக்குத் தென்னாபிரிக்க அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதிஇ சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ. ஆகியோரின் தென்னாபிரிக்க பயணம் தொடர்பிலேயே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தவறியமை மற்றும் இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள்இ சிவில் சமூகத்தை அடக்குதல் போன்றவற்றுக்கு அப்பால், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க மனித உரிமைக் குழுக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.