இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது!

எரிபொருள் விலை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.